/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தண்ணீர் சுத்திகரிப்பு ரசாயனம் இறக்குமதிக்கு பொருள் குவிப்பு வரி
/
தண்ணீர் சுத்திகரிப்பு ரசாயனம் இறக்குமதிக்கு பொருள் குவிப்பு வரி
தண்ணீர் சுத்திகரிப்பு ரசாயனம் இறக்குமதிக்கு பொருள் குவிப்பு வரி
தண்ணீர் சுத்திகரிப்பு ரசாயனம் இறக்குமதிக்கு பொருள் குவிப்பு வரி
ADDED : மார் 10, 2025 10:54 PM
புதுடில்லி, சீனா, ஜப்பான் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும், 'டிரைகுளோரோ ஐசோசயான்யூரிக்' அமிலத்துக்கு, பொருள் குவிப்பு வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நீர் சுத்திகரிப்பு துறையில் டிரைகுளோரா ஐசோசயான்யூரிக் என்ற அமிலமானது, கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமிலம், சீனா, ஜப்பான் நாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
மத்திய வர்த்தக அமைச்சகம் நடத்திய விசாரணையில் இந்த பாதிப்பு உறுதியான நிலையில், அதன் பரிந்துரைப்படி, இந்த அமிலத்தின் இறக்குமதிக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு டன்னுக்கு 986 டாலர், அதாவது ரூபாய் மதிப்பில் 86,000 வரை, பொருள் குவிப்பு வரி விதித்து, மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பொருள் குவிப்பு வரி விதிப்பு என்பது, நியாயமான வர்த்தகம் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சமமான வாய்ப்பை உறுதி செய்ய, உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு விதிக்கப்படுகிறது. இதன் நோக்கம், கட்டுக்கடங்காமல் பொருட்கள் இறக்குமதி குவிப்பை தடுப்பதாகும்.