/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பாலிசி புதிப்பிக்க புதிய நெறிமுறை
/
பாலிசி புதிப்பிக்க புதிய நெறிமுறை
ADDED : ஜூன் 10, 2024 01:14 AM

மருத்துவ காப்பீடு பாலிசிகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பாக காப்பீடு ஆணையம் புதிய நெறிமுறையை அறிமுகம் செய்துள்ளது.
காப்பீடு பாலிசிகளை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். பிரிமியம் தொகை செலுத்தத் தவறும் போது பாலிசி காலாவதியாகிவிடும். எனினும், பாலிசியை புதுப்பிக்க மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் வழங்குகின்றன. சலுகை காலம் என இது குறிப்பிடப்படுகிறது. ஒரு மாத காலம் வரை இது அமையலாம்.
இந்த சலுகை காலத்தில் பிரிமியம் செலுத்தி பாலிசியை புதுப்பித்துக்கொள்ளலாம் என்றாலும், இடைப்பட்ட காலத்திற்கு காப்பீடு பாதுகாப்பை நிறுவனங்கள் இதற்கு முன் வழங்கியதில்லை. தற்போது, பாலிசி தாமதமாக புதுப்பிக்கப்படும் போது, இடைப்பட்ட காலத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், கூடுதல் காலத்தை முறைப்படுத்தும் வகையிலும் நெறிமுறை வெளியிட்டுள்ளது. இதன்படி, மாதத்தவணையில் பிரிமியம் செலுத்தியிருந்தால் சலுகை காலம் பதினைந்து நாட்கள் என்றும் காலாண்டு, அரையாண்டு, ஆண்டு அடிப்படையில் பிரிமியம் செலுத்தினால் சலுகை காலம் ஒரு மாதம் என்றும் காப்பீடு ஆணையம் தெரிவித்துள்ளது.

