/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தமிழகத்தில் அணுமின் நிலையம் என்.டி.பி.சி., நிறுவனம் திட்டம் அணுமின் உற்பத்திக்கு புதிய துணை நிறுவனம்

ADDED : ஆக 31, 2024 12:13 AM

புதுடில்லி:நாட்டின் முன்னணி மின்சக்தி நிறுவனமான என்.டி.பி.சி., அணுமின் சக்தி வர்த்தகத்திற்காக துணை நிறுவனத்தை துவங்க திட்டமிட்டுள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில் அணுமின் நிலையம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான, தேசிய அனல்மின் நிறுவனம் எனப்படும் என்.டி.பி.சி.,யின் 48வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், அதன் நிர்வாக இயக்குனர் குர்தீப் சிங் கூறியதாவது:
இந்திய அணுசக்தி நிறுவனமான என்.பி.சி.ஐ.எல்., உடன் இணைந்து, சுமார் 50,000 கோடி ரூபாய் முதலீட்டில், ராஜஸ்தானின் மஹி பன்ஸ்வாராவில் 2.8 ஜிகாவாட், அணுமின்சார உற்பத்திக்கான பணிகளை துவங்கஉள்ளோம். மேலும், அணுமின் உற்பத்திக்கென துணை நிறுவனம் ஒன்றைத் துவங்கவும் திட்டமிட்டு உள்ளோம்.
அதன்வாயிலாக, தமிழகம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு சாத்தியமுள்ள இடங்களை அடையாளம் காணவும்; தேவையான ஒப்புதல்களை பெறவும் பணிகள் நடைபெறுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் ஏற்கனவே, கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய 2 இடங்களில் அணுமின் நிலையங்கள் உள்ளன
என்.டி.பி.சி. அணுமின் நிலையம் அமைத்தால், அது 3வது ஆலையாக இருக்கும்
தமிழகம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் அணுமின் நிலையம் அமைக்க திட்டம்