/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சர்க்கரை துறையில் மாறும் பழைய விதிகள்
/
சர்க்கரை துறையில் மாறும் பழைய விதிகள்
ADDED : ஆக 23, 2024 10:52 PM

புதுடில்லி:சர்க்கரை உற்பத்தி, இருப்பு வைத்தல் மற்றும் விலை நிர்ணயத்திற்கான 60 ஆண்டு கால விதிகளை, தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப மறுஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'சர்க்கரை கட்டுப்பாட்டு உத்தரவு 2024' என்ற வரைவு விதிகளை மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை வெளியிட்டுள்ளது.
சர்க்கரை துறை கண்டுள்ள பலமடங்கு மாற்றங்களால் 1966ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட விதிகளை மாற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை உற்பத்தியில் தொடர்புடையவர்கள் செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் வரைவு குறித்து கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

