தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ டிராக்டர் வணிகத்தில் இருந்து 'போர்ஸ் மோட்டார்ஸ்' விலகல்

டிராக்டர் வணிகத்தில் இருந்து 'போர்ஸ் மோட்டார்ஸ்' விலகல்

டிராக்டர் வணிகத்தில் இருந்து 'போர்ஸ் மோட்டார்ஸ்' விலகல்


ADDED : மார் 29, 2024 10:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2024 10:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:'போர்ஸ் மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் டிராக்டர் வணிகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போர்ஸ் மோட்டார்ஸ், அதன் டிராக்டர் மற்றும் அதை சார்ந்த வணிகங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

நேற்று நடந்த நிர்வாக குழு சந்திப்பில், விவசாய டிராக்டர் தயாரிப்பு மற்றும் அதை சார்ந்த வணிகங்களில் இருந்து, நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் வெளியேற முடிவு செய்யப்பட்டது.

சரக்கு மற்றும் போக்குவரத்து, கடைசி மைல் இயக்கம், பாதுகாப்பு துறைக்கான சிறப்பு வாகனங்கள் போன்ற சில முக்கிய பிரிவுகளில் மட்டும் கவனம் செலுத்த, நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

கடந்த நிதியாண்டில், நிறுவனத்தின் விவசாய டிராக்டர்களின் விற்பனை 182 கோடி ரூபாயாகும். இது, நிறுவனத்தின் மொத்த வருவாயில், 3.66 சதவீதமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us