/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நேற்று வரை எதிர்ப்பு; இன்று கைகோர்ப்பு மஸ்க் உடன் இணையும் அம்பானி, மிட்டல்
/
நேற்று வரை எதிர்ப்பு; இன்று கைகோர்ப்பு மஸ்க் உடன் இணையும் அம்பானி, மிட்டல்
நேற்று வரை எதிர்ப்பு; இன்று கைகோர்ப்பு மஸ்க் உடன் இணையும் அம்பானி, மிட்டல்
நேற்று வரை எதிர்ப்பு; இன்று கைகோர்ப்பு மஸ்க் உடன் இணையும் அம்பானி, மிட்டல்
ADDED : மார் 13, 2025 12:51 AM

புதுடில்லி:இந்தியாவில் வர்த்தக எதிரிகள் இருவரை தொழில் கூட்டாளிகளாக மாற்றியிருக்கிறது, அமெரிக்க பெரும் பணக்காரர் எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம்.
செயற்கைக்கோள் வழி அதிவேக இணையதள சேவை வழங்க, ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க்குடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க்கை, இந்தியா வில் கால்பதிக்க மஸ்க் திட்டமிட்டார். வழக்கமான அலைக்கற்றை ஏலம் போல அல்லாமல், நிர்வாக ரீதியான ஒப்புதலை பெற, மத்திய அரசிடம் எலான் மஸ்க் விண்ணப்பித்தார்.
ஆனால், அலைக்கற்றை ஏலத் தொகையைவிட குறைவாக, நிர்வாக ரீதியான ஒதுக்கீட்டை மஸ்க் நிறுவனம் பெற்றால், தங்கள் வர்த்தகம் பாதிக்கப்படும் என ஏர்டெல் தலைவர் சுனில் பார்தி மிட்டலும், ஜியோ தலைவர் முகேஷ் அம்பானியும் கருதினர்.
இதையடுத்து, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படாமல் மத்திய அரசு தாமதம் செய்து வந்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் ஒப்பந்தம் செய்ததாக திடீரென அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, உள்நாட்டில் வர்த்தக போட்டியாளரான ஏர்டெல்லை மட்டுமின்றி; ஸ்டார்லிங்கையும் ஜியோ எதிர்கொள்ள நேரிடும் என கருதப்பட்டது.
ஆனால் அடுத்த அதிரடியாக, எலான் மஸ்க் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, ஜியோ பிளாட்பார்ம் நிறுவனம் தெரிவித்தது.