sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

சீறிப்பாயும் பங்கு சந்தைகள்: தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

/

சீறிப்பாயும் பங்கு சந்தைகள்: தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

சீறிப்பாயும் பங்கு சந்தைகள்: தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

சீறிப்பாயும் பங்கு சந்தைகள்: தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

2


ADDED : ஜூலை 04, 2024 11:58 PM

Google News

ADDED : ஜூலை 04, 2024 11:58 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: சமீபகாலமாக, பங்குச் சந்தைகள் தினந்தோறும் புதிய உச்சங்களை எட்டி வரும் நிலையில், 'செபி' மற்றும் எஸ்.ஏ.டி., எனும் பங்குச்சந்தை மேல் முறையீட்டு தீர்ப்பாயங்கள், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்., சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.

மும்பையில் நேற்று புதிய எஸ்.ஏ.டி., வளாகத்தை திறந்துவைத்த அவர், பங்குச் சந்தை செயல்பாடுகள் நிலையாக இருப்பதை உறுதிப்படுத்த, மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் கிளைகளை அதிகப்படுத்துவது அவசியம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், எஸ்.ஏ.டி., தொடர்பான புதிய இணையதளம் ஒன்றையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

'சென்செக்ஸ்' 80,000 புள்ளிகளை எட்டியிருப்பது ஒரு சிறப்பான தருணம். இதையடுத்து, நாம் இன்னும் மிக முக்கிய நிலைக்கு சென்றுள்ளோம். இப்போது முதலீட்டாளர்கள் சரியான பாதையில் செல்கிறார்களா என்பதை, ஒழுங்குமுறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

பங்குச் சந்தைகள் உயர உயர, செபி மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் பொறுப்பும் கூடுகிறது. நாட்டில் முதலீட்டு சூழலில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதில், இவற்றுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது.

முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பிக்கை, மற்றும் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதை நிவர்த்தி செய்வதற்கு வலுவான நடைமுறைகள் இருக்கும் பட்சத்தில், நம் நாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் முன்வருவர்.

இந்த முதலீடுகள், கூடுதலான மூலதன உருவாக்கம், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

இதில், பங்குச்சந்தை மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் பங்கு, அனைவரும் சட்டப்படி செயல்படுகிறார்களா என்பதை உறுதிப்படுத்தும் நடுவராக செயல்படவேண்டியது தான். மேலும், தொழில்நுட்ப மேம்பாடுகள் உள்ளிட்ட புதுப்புது முன்னேற்றங்களை எளிதில் உள்வாங்கி செயல்பட வேண்டும்.

பங்குச் சந்தை செயல்பாடுகள், 'கார்ப்பரேட் கவர்னன்ஸ்' ஆகியவை தொடர்பான வழக்குகளிலேயே மேல்முறையீடுகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை கருத்தில்கொண்டு, மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் கிளைகளை அதிகப்படுத்துவது என்பது, கொள்கை ரீதியான முடிவு. தலைமை நீதிபதியாக இதில் உள்ள சிக்கல்கள் குறித்து நான் எனது கருத்துகளை தெரிவித்துள்ளேன். இதுகுறித்து முடிவெடுக்க வேண்டிய கடமை, இது சம்பந்தமான பொறுப்பில் உள்ளவர்களுக்கு உள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us