தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ சாட்டிலைட் இணைய சேவை: ஒப்புதல் பெற்றது 'ரிலையன்ஸ்'

சாட்டிலைட் இணைய சேவை: ஒப்புதல் பெற்றது 'ரிலையன்ஸ்'

சாட்டிலைட் இணைய சேவை: ஒப்புதல் பெற்றது 'ரிலையன்ஸ்'


ADDED : ஜூன் 14, 2024 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2024 01:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ரிலையன்ஸ் குழுமம், இந்தியாவில் சாட்டிலைட் இணைய சேவைகளை துவக்குவதற்கு ஒப்புதல் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸின் 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்' நிறுவனம், லக்ஸம்பர்க்கைச் சேர்ந்த எஸ்.இ.எஸ்., நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் சாட்டிலைட் இணைய சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

இக்கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'ஆர்பிட் கனெக்ட் இந்தியா' என்ற நிறுவனம், தற்போது, 'இன் - ஸ்பேஸ்' எனும், இந்திய விண்வெளி ஊக்குவிப்பு மையத்திடம் இருந்து, இந்தியாவில் சாட்டிலைட் இணைய சேவைகளை துவக்குவதற்கான மூன்று ஒப்புதல்களை பெற்றுள்ளது.

ஏற்கனவே, எலான் மஸ்கின் 'ஸ்டார்லிங்க்' மற்றும் 'அமேசான்' போன்ற நிறுவனங்கள், இந்தியாவில் சாட்டிலைட் இணைய சேவைகளை துவக்குவதற்கு முயற்சித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் குழுமம் ஒப்புதல் பெற்று உள்ளது. எனினும் இதை செயல்படுத்த, தொலைதொடர்பு ஆணையத்தின் ஒப்புதலையும் ரிலையன்ஸ் பெற வேண்டும்.

இப்பிரிவில் சேவைகளை துவக்க, அதிக நிறுவனங்கள் முன்வருவதால், இச்சேவைகளின் விலை குறைய வாய்ப்பு உள்ளதா கவும், இதனால் வாடிக்கை யாளர்கள் பயனடைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us