தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ 'நெஸ்லே' ராயல்டி உயர்த்த பங்குதாரர்கள் எதிர்ப்பு

'நெஸ்லே' ராயல்டி உயர்த்த பங்குதாரர்கள் எதிர்ப்பு

'நெஸ்லே' ராயல்டி உயர்த்த பங்குதாரர்கள் எதிர்ப்பு


ADDED : மே 19, 2024 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2024 01:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி,:'நெஸ்லே' நிறுவனத்தின் ராயல்டி கட்டணம் உயர்த்தப்படுவதற்கு எதிராக, 'நெஸ்லே இந்தியா' பங்குதாரர்கள் ஓட்டளித்துள்ளனர்.

நெஸ்லே, அதன் ராயல்டி கட்டணத்தை ஆண்டுக்கு 0.15 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, இத்தாய் நிறுவனத்தின் கீழ் உள்ள மற்ற நிறுவனங் கள், தங்கள் நிகர விற்பனையில், 5.25 சதவீதத்தை ராயல்டி கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த ராயல்டி கட்டணம் உயர்த்தப்படுவதற்கு, நெஸ்லே நிறுவனத்தின் இந்திய பிரிவான நெஸ்லே இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின், 57.17 சதவீத பங்குதாரர்கள், கட்டணம் உயர்வுக்கு எதிராக ஓட்டளித்துஉள்ளனர்.

இந்த கட்டணம் உயர்த்தப்படும் பட்சத்தில், நெஸ்லே இந்தியா நிறுவனம், ஐந்து ஆண்டு காலத்துக்கு, கிட்டத்தட்ட 610 கோடி ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us