/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எஸ்.ஐ.பி., முதலீட்டில் தொடரும் ஆர்வம்
/
எஸ்.ஐ.பி., முதலீட்டில் தொடரும் ஆர்வம்
ADDED : மே 27, 2024 12:30 AM

மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி., எனும் சீரான முறையில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதோடு, சராசரி எஸ்.ஐ.பி., முதலீடு தொகையும் அதிகரித்துள்ளது.
முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி., மூலமான சீரான முதலீட்டில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவதன் அடையாளமாக, ஏப்ரல் மாதத்தில் இந்த பிரிவில் முதலீடு வரத்து 20,371 கோடியாக இருந்ததாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சங்கம் தகவல் தெரிவிக்கிறது. மியூச்சுவல் பண்ட் முதலீடுகளும் பொதுவாக அதிகரித்துள்ளது.
சீரான முதலீடு மூலமான நிதி வரத்து தொடர்ந்து பத்தாவது மாதமாக , பதினைந்தாயிரம் கோடிக்கு அதிகமாக இருப்பதோடு, தற்போது பயன்பாட்டில் உள்ள கணக்குகள் எண்ணிக்கை 8.70 கோடியாக உள்ளது. ஆண்டு அடிப்படையில் இது 35 சதவீத உயர்வாகும்.
சீரான முதலீட்டிற்கான சராசரி தொகை திட்டம் ஒன்றுக்கு 2,340 ரூபாயாக உள்ளது. ஆண்டு அடிப்படையில் இது பத்து சதவீத வளர்ச்சியாக அமைகிறது. முதலீட்டாளர்கள் மாதாந்திர முதலீட்டை அதிகரிப்பதையும் இது உணர்த்துகிறது.
புதிய கணக்குகள் துவக்குவதும் அதிகரித்துள்ள நிலையில், ஏற்கனவே துவக்கப்பட்ட கணக்குகள் கைவிடப்படுவதும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

