/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஜூன் மாத எஸ்.ஐ.பி., முதலீடு ரூ.21,000 கோடியை கடந்தது
/
ஜூன் மாத எஸ்.ஐ.பி., முதலீடு ரூ.21,000 கோடியை கடந்தது
ஜூன் மாத எஸ்.ஐ.பி., முதலீடு ரூ.21,000 கோடியை கடந்தது
ஜூன் மாத எஸ்.ஐ.பி., முதலீடு ரூ.21,000 கோடியை கடந்தது
ADDED : ஜூலை 10, 2024 01:00 AM

புதுடில்லி: மியூச்சுவல் பண்டுகளில், சீரான முறையில் முதலீடு செய்ய வழிவகுக்கும் எஸ்.ஐ.பி., முறையில், கடந்த ஜூன் மாதம், இதுவரை இல்லாத வகையில், சாதனை உச்சமாக 21,262 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மே மாதத்தில், 20,904 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து 'ஆம்பி' எனும் இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த மாதம், எஸ்.ஐ.பி., முறையில் 21,262 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, எஸ்.ஐ.பி., திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 12.43 லட்சம் கோடி ரூபாயை எட்டிஉள்ளது.
கடந்த மாதம், புதிதாக 55 லட்சம் எஸ்.ஐ.பி., கணக்குகள் துவங்கப்பட்டன. 32.35 லட்சம் கணக்குகள் முதிர்ச்சியடைந்தன மற்றும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்த எஸ்.ஐ.பி., கணக்குகளின் எண்ணிக்கை 8.98 கோடியாக உள்ளது.
கடந்த மாதம், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு 17 சதவீதம் அதிகரித்து, 40,608 கோடி ரூபாயாக இருந்தது. அதே நேரத்தில், கடன் பத்திரங்கள் சார்ந்த மியூச்சுவல் பண்டுகளிலிருந்து கிட்டத்தட்ட 1.07 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரும்பப் பெறப்பட்டது. முன்கூட்டிய வரி செலுத்தல் உள்ளிட்ட காரணங்களாலேயே, இப்பிரிவிலிருந்து முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில், மியூச்சுவல் பண்டுகளின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு, கடந்த மாதம் 61.16 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. இது, 60 லட்சம் கோடி ரூபாயை கடப்பது இதுவே முதல்முறையாகும். இவ்வாறு தெரிவித்து உள்ளது.
எஸ்.ஐ.பி., முதலீடு
மே: ரூ.20,904 கோடி
ஜூன்: ரூ.21,262 கோடி
ஜூனில் புதிதாக துவங்கப்பட்ட கணக்குகள்: 55 லட்சம்
மொத்த எஸ்.ஐ.பி., கணக்குகள்: 8.98 கோடி