/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நிதி சுதந்திரம் பெறுவது என்றால் உண்மையில் என்ன பொருள்?
/
நிதி சுதந்திரம் பெறுவது என்றால் உண்மையில் என்ன பொருள்?
நிதி சுதந்திரம் பெறுவது என்றால் உண்மையில் என்ன பொருள்?
நிதி சுதந்திரம் பெறுவது என்றால் உண்மையில் என்ன பொருள்?
ADDED : ஜூன் 03, 2024 01:06 AM

நிதி உலகில் சேமிப்பு, முதலீடு, காப்பீடு, திட்டமிடல் போன்ற விஷயங்களோடு, நிதி சுதந்திரம் எனும் கருத்தாக்கம் தொடர்பாகவும் அடிக்கடி பேசப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். நிதி திட்டமிடலின் முக்கிய இலக்குகளில் ஒன்றா கவும் நிதி சுதந்திரம் குறிப்பிடப்படுகிறது.
மேலும், நிதி சுதந்திரம் என்பது முன்கூட்டியே ஓய்வு பெறுதலுடனும் இணைத்து பேசப்படுகிறது. நிதி சுதந்திரம் பெறுவதற்கான பலவித வழிகளும் முன்வைக்கப்படுகின்றன. நிதி சுதந்திரம் பெறுவது என்பது முக்கியம் என்றாலும், முதலில் நிதி சுதந்திரம் என்றால் என்ன என்பதை தெளிவாக அறிந்திருப்பது அவசியம்.
பணி விடுதலை:
பொதுவாக நிதி சுதந்திரம் என்பது முழுநேர பணியில் இருந்து விடுதலை அளிப்பதாகக் கருதப்
படுகிறது. முன்னதாக ஓய்வு பெற்று, பிரச்னைகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கையாக இது உருவகப்படுத்தப்படுகிறது. கையில் நிறைய பணம் வைத்துக்கொண்டு, ஓய்வு எடுப்பது
நிதி சுதந்திரமல்ல.
வாழ்க்கை தேர்வுகள்:
பணம் ஒரு முக்கிய அம்சம் என்றாலும், கையில் போதிய பணம் வைத்திருப்பது
என்பது எந்த விதத்திலும் விடுதலை அளிக்காது. பணத்தேவை என்பது வாழ்க்கை நிலைகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடியது. மேலும், செல்வம் என்பது மனநிலை சார்ந்தும் அமைவது.
விருப்ப பணி:
நிதி சுதந்திரம் பெற்றிருப்பவர்கள், வேலையே செய்யாமல் இருப்பர் என்று பொருள் இல்லை. பணத் தேவைக்காக வேலை செய்வதை விட, மனதுக்கு பிடித்த வேலையை செய்யும் நிலையில் இருப்பதை நிதி சுதந்திரம் அளிக்கும் சூழல் என புரிந்து கொள்ளலாம். இதுமன நிறைவுக்கும் வழி வகுக்கும்.
அசையா சொத்து:
சொந்த வீடு உள்ளிட்ட சொத்துக்களை அதிகம் பெற்றிருப்பதும் நிதி சுதந்திரமாக அமைந்துவிடாது. அதே போல மிகுந்த பணக்காரராக இருப்பதும் கூட நிதி சுதந்திரம் அளித்துவிடாது. பணத்தை பெருக்க அல்லது காக்க ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கலாம். இது வாழ்க்கைத் தேர்வுகளை கட்டுப்படுத்தும்.
எது சுதந்திரம்?
பொறுப்புகளில் இருந்து விடுபடுவதும் நிதி சுதந்திரம் ஆகிவிடாது. உண்மையில் நிதி சுதந்திரம் என்பது வாழ்க்கை தேர்வு தொடர்பான கட்டுப்பாடுகள் இல்லாமல் விரும்பியதை செய்யும் நிலையில் இருப்பது. இதற்கு நிதி நிலை ஒரு தடையாக இல்லாமல், நிறைவான முறையில் வாழும் வசதியே நிதி சுதந்திரம் அளிக்கும்.