/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரம் யூனிட்டிற்கு 10 காசு 'சர்சார்ஜ்'
/
வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரம் யூனிட்டிற்கு 10 காசு 'சர்சார்ஜ்'
வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரம் யூனிட்டிற்கு 10 காசு 'சர்சார்ஜ்'
வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரம் யூனிட்டிற்கு 10 காசு 'சர்சார்ஜ்'
ADDED : ஏப் 30, 2025 11:45 PM

சென்னை:தமிழகத்தில் உள்ள உயரழுத்த மின்சாரப் பிரிவு நுகர்வோர்கள், வெளிச்சந்தையில் அவர்கள் வாங்கும் மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு 10 காசு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
யாருக்கு பாதிப்பு?
தொழிற்சாலைகள் மற்றும் நுாற்பாலைகள் போன்ற அதிக மின்சாரம் பயன்படுத்தும் உயரழுத்தப் பிரிவு நுகர்வோர்கள் இந்த கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
கட்டணத்துக்கு காரணம்
இந்த நுகர்வோர்கள் வெளிச்சந்தையிலிருந்து வாங்கும் மின்சாரத்தை எடுத்துச் செல்ல, மின் வாரியத்தின் மின் வழித்தடங்களை பயன்படுத்துகின்றனர். இதற்காக மின் வாரியம் ஏற்கனவே வீலிங் கட்டணம் மற்றும் சர்சார்ஜ் வசூலிக்கிறது. தற்போது இதனுடன் கூடுதலாக 10 காசு சர்சார்ஜ் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கட்டணம்
தற்போது மின் வாரியம் வசூலிக்கும் வீலிங் கட்டணம் மற்றும் சர்சார்ஜ் யூனிட்டிற்கு 1.96 ரூபாயாக உள்ளது. புதிய கூடுதல் கட்டணம் மே 1 முதல் செப்டம்பர் 30 வரை வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்திற்கு, யூனிட்டிற்கு கூடுதலாக 10 காசு சர்சார்ஜ் விதிக்கப்பட்டுள்ளது
துறையினரின் எதிர்ப்பு
ஏற்கனவே மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள், இந்த கூடுதல் சர்சார்ஜ் விதிப்பை கைவிடுமாறு மின் வாரியத்திற்கும், ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் கோரிக்கை விடுத்திருந்தன. இருப்பினும், ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.