உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 26, 2024 10:38 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி:இந்தியாவின் உள்நாட்டு விமான பயணியர் போக்குவரத்து, கடந்த அக்டோபரில் 5.30 சதவீதம் அதிகரித்து, 1.36 கோடியாக உயர்ந்துள்ளதாக, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் உள்நாட்டு விமான பயணியர் போக்குவரத்து, கடந்த ஆண்டு அக்டோபரில் 1.26 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டு அக்டோபரில் 5.30 சதவீதம் அதிகரித்து, 1.36 கோடியை எட்டியுள்ளது.
முன்னணி விமான நிறுவனங்களான 'இண்டிகோ' 86.40 லட்சம் பயணியரையும், 'ஏர் இந்தியா' 26.48 லட்சம், 'விஸ்தரா' 12.43 லட்சம் பயணியரையும் கையாண்டுள்ளது.
குறைந்த விமானக் கட்டண நிறுவனமான 'ஸ்பைஸ் ஜெட்'டில் 3.35 லட்சம், 'ஆகாசா' ஏர் விமானத்தில் 6.16 லட்சம் பயணியரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
