/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'மகிளா சம்மான்' திட்டம் ரூ.14,500 கோடி டிபாசிட்
/
'மகிளா சம்மான்' திட்டம் ரூ.14,500 கோடி டிபாசிட்
ADDED : ஜன 30, 2024 10:57 AM
புதுடில்லி : 'மகிளா சம்மான்' சேமிப்பு திட்டத்தின் கீழ், கடந்த ஒன்பது மாதங்களில் 14,500 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்யப்பட்டு உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இச்சேமிப்பு திட்டத்தின் கீழ், 4.50 லட்சத்திற்கும் அதிமான கணக்குகளைத் தொடங்கி, மஹாராஷ்டிரா மாநிலம் முன்னணியில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
கடந்த பட்ஜெட்டில், 'மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்., 1ம் தேதி முதல், 1.60 லட்சம் அஞ்சலகங்கள் வாயிலாக, இச்சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 22.50 லட்சம் கணக்குகளுடன், 14,500 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இது பெண்களுக்கான நிதி அனுகூலங்களை வழங்குவதுடன், அவர்கள் நிதி பொறுப்பை ஏற்று அறிவார்ந்த முடிவுகளை எடுக்க ஊக்குவிக்கிறது என, மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.