/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இலக்குக்கு 5 ஆண்டுகள் முன்பே எட்டப்பட்டது; 20 சதவிகிதம் எத்தனால் கலப்பு

UPDATED : ஜூலை 25, 2025 06:37 AM
ADDED : ஜூலை 24, 2025 11:51 PM

புதுடில்லி: வருகிற 2030ம் ஆண்டுக்குள், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்னரே, அந்த இலக்கை இந்தியா எட்டியுள்ளதாக, பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பை குறைக்க உதவியது. இதனால் அன்னிய செலாவணியை சேமிக்க வழி வகுத்துள்ளது. கார்பன் வெளியேற்றத்தை குறைத்து, சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்க உதவியுள்ளது.
கிராமப்புற விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது. சமீபத்தில், தற்போதைய சந்தைப்படுத்துதல் பருவத்தில், மொலாசஸில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.