தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/தாங்கும் திறனுக்கேற்ற வர்த்தக உத்தியில் கவனம் தேவை

தாங்கும் திறனுக்கேற்ற வர்த்தக உத்தியில் கவனம் தேவை

தாங்கும் திறனுக்கேற்ற வர்த்தக உத்தியில் கவனம் தேவை


ADDED : பிப் 10, 2024 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2024 07:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த வாரம்


 எப்.எம்.சி.ஜி., நிறுவனங்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்த காலாண்டில் ஒற்றை இலக்க அளவிலான விற்பனை அதிகரிப்பை கொண்டிருந்ததாகவும், அதே சமயம் பல பிரிவுகளிலும் லாபத்தின் அளவு சற்று அதிகரித்திருந்தது என்ற செய்தி திங்களன்று வெளியானது

 ஜனவரி 16 முதல் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் 31,000 கோடி ரூபாய் அளவிலான நிதி சேவை நிறுவனங்களின் பங்குகளை விற்று, தகவல் தொழில்நுட்ப பங்குகளை வாங்கியுள்ளனர் என்ற செய்தி வியாழனன்று வெளியானது. மேலும், இந்திய மியூச்சுவல் பண்ட்கள் ஜனவரி மாதம் 2.1 லட்சம் கோடி (மொத்த அளவீட்டில்) முதலீடு செய்திருந்தன என்ற செய்தியும் அன்று வெளியானது

 இந்திய ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தில் மாறுதல் ஏதும் இல்லை என்ற முடிவை வியாழனன்று அறிவித்தது

 பங்குகளில் முதலீடு செய்யும் அளவிலான மியூச்சுவல் பண்டுகளில் தொடர்ந்து முப்பத்து ஐந்தாவது மாதமாக நிகர அளவில் முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகளை செய்திருந்தனர் என்ற செய்தி வெள்ளியன்று வெளியானது. இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் (ஜிடிபி அளவீட்டில்) ஏழு சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ள செய்தி வெள்ளியன்று வெளியானது.

வரும் வாரம்


 தொழிற்சாலைகளின் உற்பத்தி, பணவீக்கம், உற்பத்தி ஆலைகளின் உற்பத்தி, பயணியர் வாகன விற்பனை எண்ணிக்கை, ஏற்றுமதி-, இறக்குமதி யின் நிகர அளவு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன

 பணவீக்கம், சில்லரை வர்த்தகம், தொழிற்சாலைகளின் உற்பத்தி, கட்டடங்கள் கட்டுவதற்கு தரப்பட்ட அனுமதிகளின் எண்ணிக்கை, உற்பத்தியாளர்களின் விலை குறியீடு, மிச்சிகன் நுகர்வோர் மனநிலை போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.

கவனிக்க வேண்டியது


 கடந்தவாரம் திங்களன்று வர்த்தக நாளின் இறுதியில் 82 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி செவ்வாயன்று 157 புள்ளிகள் ஏற்றம், புதனன்று 1 புள்ளி ஏற்றம், வியாழனன்று 212 புள்ளிகள் இறக்கம், வெள்ளியன்று 64 புள்ளிகள் ஏற்றம் என்கிற ரீதியிலான ஏற்ற இறக்கங்களை கண்டிருந்தது

 டெக்னிக்கல் அனாலிசிஸின் அடிப்படையில் நிப்டியில் ஏறுவதற்கு தயங்கும் சூழல் இருப்பதைப் போல் செய்திகள் தெரிந்தாலுமே, வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மற்றும் நிகழ்வுகளே நிப்டியின் அடுத்த கட்ட நகர்வுகளை நிர்ணயிப்பதாய் இருக்கும். எனவே, வர்த்தகர்கள் இவற்றின் மீது கவனம் வைத்து குறைந்த அளவில் தங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ற, நஷ்டத்தை தவிர்க்கும் ஸ்டாப்லாஸ்களை கொண்டு வர்த்தகம் செய்ய முயல்வதே நல்லதொரு வர்த்தக உத்தியாக இருக்கும்.

வாரத்தின் இறுதியில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் நிப்டி ஏறுவதற்கு தயங்கும் சூழல் இருப்பதைப்போன்ற நிலைமை இருக்கின்றது என்ற போதிலும், கடந்த வாரத்தில் நடந்த ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் பார்த்தால் அது போன்ற நிலையே தொடர்வதற்கான வாய்ப்பும் அதிகமாக இருப்பதை போன்றே தோன்றுகின்றது.

நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்


நிப்டி 21,591, 21,399 மற்றும் 21,237 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும் (சப்போர்ட்), 22,014, 22,245 மற்றும் 22,407 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் (ரெசிஸ்டென்ஸ்) டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

நிப்டியின் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 21,822 என்ற அளவிற்கு மேலே சென்று அதன் பின்னால் தொடர்ந்து அதிக அளவில் வர்த்தகமாக வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us