/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் கடந்த ஆண்டில் 20% சரிவு
/
கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் கடந்த ஆண்டில் 20% சரிவு
கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் கடந்த ஆண்டில் 20% சரிவு
கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் கடந்த ஆண்டில் 20% சரிவு
ADDED : ஜன 19, 2024 10:34 PM

புதுடில்லி:இந்தியாவில், நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு, கடந்த ஆண்டு, 5.47 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக, 'கிராண்ட் தார்ன்டன் பாரத்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு, 1,641 ஆக இருந்தது.
இது 2022ம் ஆண்டு அளவை விட 20 சதவீதம் குறைந்து உள்ளது.
அதேபோல், இவற்றின் மதிப்பும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு, 5.47 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் சரிபாதியாக குறைந்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க 494 பரிவர்த்தனைகள், 72 சதவீத சரிவுக்கு அதாவது 2.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு குறைவுக்கு காரணமாக இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, வெளிநாட்டு நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு, கடந்த 2022ல் இருந்த 1.48 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 26,000 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.
மிகப்பெரிய பரிவர்த்தனையாக 'சுரக்ஷா' குழுமம் -'ஜெய்பீ'கையகப்படுத்தல் அமைந்தது. இதன் மதிப்பு, 20,750 கோடி ரூபாயாகும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுஉள்ளது.