/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கடலுார் துறைமுகத்தை மீண்டும் இயக்க ஒப்பந்தம்
/
கடலுார் துறைமுகத்தை மீண்டும் இயக்க ஒப்பந்தம்
ADDED : ஜூலை 05, 2025 12:05 AM

சென்னை:கடலுார் துறைமுகத்தை 40 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் இயக்குவதற்காக தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு கடல்சார் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
கடலுார் துறைமுகம், 111 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த துறைமுகத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு உரங்கள், நிலக்கரி ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், கடலுக்கு உள்ளேயே கப்பல்கள் நிறுத்தப்படும்.
சிறிய படகுகள் வாயிலாக, பார்ஜ் எனப்படும் மிதவை கொண்டு செல்லப்பட்டு அதில் உள்ள சரக்குகள் கொஞ்சம், கொஞ்சமாக இறக்கி துறைமுகத்திற்கு எடுத்துவரப்பட்டன.
பல்வேறு காரணங்களால், துறைமுகத்தின் செயல்பாடு முடங்கியது. அதை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இயங்கும் சிறுதுறைமுகங்கள் துறையும், தமிழ்நாடு கடல்சார் வாரியமும் கடலுார் துறைமுகத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.
மஹதி கடலுார் போர்ட் அண்டு மேரிடைம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், துறைமுகத்தை இயக்குவதற்கு முன்வந்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தலைமை செயலகத்தில் நேற்று கையெழுத்தானது.