/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'விமான பயணியர் எண்ணிக்கை 2030ல் 30 கோடியாக உயரும்”'
/
'விமான பயணியர் எண்ணிக்கை 2030ல் 30 கோடியாக உயரும்”'
'விமான பயணியர் எண்ணிக்கை 2030ல் 30 கோடியாக உயரும்”'
'விமான பயணியர் எண்ணிக்கை 2030ல் 30 கோடியாக உயரும்”'
ADDED : ஜன 19, 2024 10:19 PM

புதுடில்லி:இந்தியாவில் உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை, வரும் 2030ல், 30 கோடி என்ற அளவை எட்டும் என, விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்தியா, இன்று உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாகவும், உலகின் ஏழாவது மிகப்பெரிய சர்வதேச விமான போக்குவரத்துசந்தையாகவும் உள்ளது.
மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகள் இரண்டையும் இணைத்தால், உலகின் ஐந்தாவது பெரிய விமான சந்தையாகவும் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணியர் எண்ணிக்கை, சராசரியாக 15 சதவீதம் மற்றும் 6.10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. அதேபோல் கடந்த 15 ஆண்டுகளில், உள்நாட்டு மற்றும் சர்வதேச சரக்கு போக்குவரத்து, முறையே 60 மற்றும் 53 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளன.
உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை, கடந்த 2014ம் ஆண்டில், 6 கோடியில் இருந்து, தற்போது 2023ல் 15.3 கோடியாக அதிகரித்து உள்ளது. இது வரும் 2030ம் ஆண்டில், 30 கோடியாக உயரும் என்று துறை சார்ந்த நிபுணர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தப்படியாக, அதிக அளவிலான விமானங்களை வாங்கும் நாடாக இந்தியா உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தப்படியாக, அதிக அளவிலான விமானங்களை வாங்கும் நாடாக இந்தியா உள்ளது.