/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சிறந்த உணவு பிராண்டு பட்டியல் அமுல் தொடர்ந்து முதலிடம்
/
சிறந்த உணவு பிராண்டு பட்டியல் அமுல் தொடர்ந்து முதலிடம்
சிறந்த உணவு பிராண்டு பட்டியல் அமுல் தொடர்ந்து முதலிடம்
சிறந்த உணவு பிராண்டு பட்டியல் அமுல் தொடர்ந்து முதலிடம்
ADDED : ஜூன் 29, 2025 09:03 PM

புதுடில்லி:இந்தியாவின் சிறந்த உணவு பிராண்டுக்கான பட்டியலில், அமுல் நிறுவனம் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளதாக பிராண்டு பைனான்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிரிட்டனை தளமாகக் கொண்ட மதிப்பீட்டு நிறுவனமான 'பிராண்டு பைனான்ஸ்', 'பிராண்டு பைனான்ஸ் இந்தியா 100 - 2025' என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்திய அளவில் 'டாப்' ஐந்து உணவு பிராண்டு நிறுவனங்களுள், குஜராத்தின் பால் கூட்டுறவு நிறுவனமான அமுல், தொடர்ந்து நம்பர் ஒன் நிறுவனமாக தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, டில்லியைச் சேர்ந்த மதர் டெய்ரி நிறுவனம், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிறுவனங்களுக்கு அடுத்தடுத்த இடங்களில் பிரிட்டானியா நிறுவனமும், கர்நாடகாவின் பால் கூட்டுறவு நிறுவனமான நந்தினியும் முறையே மூன்றாவது, நான்காவது இடங்களை பிடித்துள்ளன. டாபர் நிறுவனம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில், முதல் 100 இந்திய பிராண்டுகளில் அமுல் 17வது இடத்தில் உள்ளது. கடந்த 2024ல், 41வது இடத்தில் இருந்த மதர் டெய்ரி, நடப்பாண்டில் 35வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.