தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ 'அடல்' ஓய்வூதிய திட்டத்தை 5 ஆண்டுகள் நீட்டிக்க ஒப்புதல்

 'அடல்' ஓய்வூதிய திட்டத்தை 5 ஆண்டுகள் நீட்டிக்க ஒப்புதல்

 'அடல்' ஓய்வூதிய திட்டத்தை 5 ஆண்டுகள் நீட்டிக்க ஒப்புதல்


ADDED : ஜன 22, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 01:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வு காலத்தில், வருமான பாதுகாப்பை உறுதி செய்யும் அடல் பென்ஷன் திட்டத்தை, வரும் 2030 - -31ம் நிதியாண்டு வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, ஓய்வு காலத்தில் குறைந்தபட்ச வருமான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கடந்த 2015ல் அடல் பென்ஷன் திட்டம் துவங்கப்பட்டது.

60 வயதை எட்டும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் பங்களிப்பை பொறுத்து, இத்திட்டத்தின் கீழ் 1,000 முதல் 5,000 ரூபாய் வரை ஓய்வூதியமாக வழங்கப்படும்.

கிட்டத்தட்ட 8.66 கோடி பேர் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அடல் பென்ஷன் திட்டத்தை 2030 - 31ம் நிதியாண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விளம்பர நடவடிக்கைகள் வாயிலாக பயனாளிகளை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

 அடல் பென்ஷன் கணக்கு பராமரிப்பில் பொதுத்துறை வங்கிகள் 70.44 சதவீத பங்கு

 2023 - 24 நிலவரப்படி, திட்டத்தின் வளர்ச்சி விகிதம் 24%

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us