தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/  சிமென்ட் ஆலை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

 சிமென்ட் ஆலை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

 சிமென்ட் ஆலை முற்றுகையிட முயன்றவர்கள் கைது


ADDED : செப் 24, 2026 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 07:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுக்கரை: மதுக்கரையிலுள்ள தனியார் சிமென்ட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று காலை, 125 பெண்கள் உள்பட, 160 பேர், மதுக்கரை நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் ஆறுச்சாமி தலைமையில், குரும்பபாளையம் சாலைக்கு வந்தனர். ஐ.என்.டி.யூ.சி, மண்டபம் அருகே அவர்களை போலீசார் தடுத்தனர்.

இதையடுத்து அனைவரும் சாலையில் அமர்ந்து, தொழிற்சாலைக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்து, மேட்டாங்காடு பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து அங்கு மதுக்கரை தாலுகா தாசில்தார் செந்தில்குமார் தலைமையில்,பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பொது மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இதனை தொழிற்சாலை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் இரவு, 7:20 மணியளவில் விடுவிக்கப் பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us