/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
வங்கி ஊழியர்கள் மார்ச் 24, 25ல் வேலைநிறுத்தம்
/
வங்கி ஊழியர்கள் மார்ச் 24, 25ல் வேலைநிறுத்தம்
ADDED : பிப் 07, 2025 11:02 PM

புதுடில்லி:புதிய பணியாளர்கள் நியமனம், வாரத்துக்கு ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 24 மற்றும் 25ம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்பது தொழிற்சங்கங்களைச் சேர்ந்த வங்கி ஊழியர்கள், அடுத்த மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில், இரண்டு நாள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்னெடுப்பாக, ஒன்பது தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான, யு.எப்.பி.யு., எனப்படும் 'ஐக்கிய வங்கி சங்கங்கள் அமைப்பு' வருகிற 14ம் தேதி மாலை, மாவட்ட தலைமையகங்களில் ஆர்ப்பாட்டத்துடன் இதற்கான போராட்டத் திட்டத்தை துவங்கும் என அறிவித்துள்ளன.