/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'சிஸ்கா' மீது திவால் நடவடிக்கை
/
'சிஸ்கா' மீது திவால் நடவடிக்கை
ADDED : அக் 10, 2024 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:'சிஸ்கா எல்.இ.டி., லைட்ஸ்' நிறுவனத்துக்கு எதிராக திவால் நடவடிக்கைகளை தொடங்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
எல்.இ.டி., பல்புகளை சிஸ்கா தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தங்களுக்கு 7.70 கோடி ரூபாய் கடன் பாக்கி செலுத்த தவறியதாகக் கூறி, அதன் மீது திவால் நடவடிக்கைகளை தொடங்க, சன்ஸ்டார் இண்டஸ்டிரீஸ், மும்பை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற தீர்ப்பாயம் சிஸ்காவின் இயக்குனர் குழுவை நீக்கி, இடைக்கால தீர்வு நிபுணரை நியமித்து உத்தரவிட்டு உள்ளது.

