/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பழைய மெஷின்களில் 'அப்டேட்' 'ரீ கண்டிஷன் சென்டர்' அமையுமா?
/
பழைய மெஷின்களில் 'அப்டேட்' 'ரீ கண்டிஷன் சென்டர்' அமையுமா?
பழைய மெஷின்களில் 'அப்டேட்' 'ரீ கண்டிஷன் சென்டர்' அமையுமா?
பழைய மெஷின்களில் 'அப்டேட்' 'ரீ கண்டிஷன் சென்டர்' அமையுமா?
ADDED : ஜன 17, 2024 11:18 PM

திருப்பூர்: இறக்குமதி செய்யப்பட்டு, சில ஆண்டுகள் ஆன இயந்திரங்களை, 'அப்டேட்' செய்ய வசதியாக, 'ரீ கண்டிஷன்' சென்டர் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருப்பூர் தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் பின்னலாடை தொழிலில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தை என, ஆண்டுக்கு, 65,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. பின்னலாடை உற்பத்தியில், 'நிட்டிங், டையிங், காம்பாக்டிங்' மற்றும் 'ரைசிங், எம்ப்ராய்டரிங், பிரின்டிங்' என, பல்வேறு தொழில் பிரிவுகள் அடங்கியுள்ளன.
அனைத்து வகை உற்பத்தி பிரிவிலும், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, நவீன இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளிநாட்டு இயந்திர தயாரிப்பு நிறுவன ஏஜன்சிகள், உள்ளூரிலேயே ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை பராமரிப்பு சேவை வழங்குகின்றன.
இருப்பினும், புதிய தொழில்நுட்பத்துடன் இயந்திரங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் போது, பழைய இயந்திரங்களில் அத்தகைய வசதியை மேம்படுத்த முடிவதில்லை.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில், ஒருங்கிணைந்த, ரீ கண்டிஷன் சென்டர் அமைக்க வேண்டுமென, திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
பின்னலாடை தொழில்துறையினர் கூறுகையில், 'ஏழு ஆண்டுகளுக்கு பின் இயந்திரம் பழுதானால் சீரமைக்கலாம்; ஆனால் புதிய தொழில்நுட்பத்துக்கு மேம்படுத்த முடிவதில்லை. 'அடிக்கடி அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பத்தை, பழைய மெஷின்களில் 'அப்டேட்' செய்தால், பெரும் செலவு தவிர்க்கப்படும்.
'புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஏதுவாக, 'ரீ கண்டிஷன் சென்டர் அமைக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்' என்றனர்.
புதிய தொழில்நுட்பத்துடன் இயந்திரங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் போது, பழைய இயந்திரங்களில் அத்தகைய வசதியை மேம்படுத்த முடிவதில்லை