/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சிறப்பான நிறைவில் கார் விற்பனை
/
சிறப்பான நிறைவில் கார் விற்பனை
ADDED : ஜன 01, 2025 11:41 PM

சென்னை:டிசம்பர் மாத பயணியர் கார் விற்பனை, 2024ம் ஆண்டை சிறப்பாக நிறைவு செய்துள்ளது. கடந்த டிசம்பரில், கார் விற்பனை 16.25 சதவீதமாக உயர்ந்துஉள்ளது.
கடந்த, 2023 டிசம்பரில் 2.55 லட்சம் கார்கள் விற்பனை ஆன நிலையில், கடந்த டிசம்பரில், 2.97 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சமீப காலமாக கார் விற்பனை, பண்டிகை மாதத்தை தவிர, மற்ற மாதங்களில் பெரிய முன்னேற்றம் இன்றி காணப்பட்டது.
இந்நிலையில், ஆண்டு இறுதி சலுகைகள், புதிய கார் அறிமுகங்கள் ஆகியவை, கார் விற்பனையை வேகப்படுத்தியது.
மாருதி சுசூகி, பல மாதங்களுக்கு பிறகு 20 சதவீத வளர்ச்சி இலக்கை கடந்துள்ளது. விற்பனையில் பெரிய வளர்ச்சி இல்லை என்றாலும், ஹூண்டாய் நிறுவனத்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளி, டாடா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நிஸான் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, 29 சதவீதத்தில் உள்ளது. மாருதி நிறுவனத்துடனான கூட்டணியால், ஒவ்வொரு மாதமும், விற்பனைகளை குவித்து வருகிறது இந்நிறுவனம்.
அதிகபட்சமாக, எம்.ஜி., நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, 70 சதவீதமாக உள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 'வின்சர்' மின்சார கார், இதற்கு முக்கிய காரணம்.