/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
லஞ்ச வழக்கில் வங்கி அதிகாரிகளை பாதுகாக்க சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் தலைமையில் குழு
/
லஞ்ச வழக்கில் வங்கி அதிகாரிகளை பாதுகாக்க சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் தலைமையில் குழு
லஞ்ச வழக்கில் வங்கி அதிகாரிகளை பாதுகாக்க சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் தலைமையில் குழு
லஞ்ச வழக்கில் வங்கி அதிகாரிகளை பாதுகாக்க சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் தலைமையில் குழு
ADDED : பிப் 22, 2024 02:17 AM

புதுடில்லி:ஊழல் வழக்குகள் குறித்து நடவடிக்கை எடுக்கவும், விசாரணை ஏஜன்சிகளின் தன்னிச்சையான நடவடிக்கையிலிருந்து வங்கியின் மூத்த அதிகாரிகளை காக்கவும், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது.
சி.பி.ஐ.,யின் முன்னாள் சிறப்பு இயக்குனர் டி.சி.ஜெயின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், எஸ்.பி.ஐ., உள்ளிட்ட நாட்டின் மூன்று பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் உள்ளனர்.
கடன் மோசடி
வங்கிகள் சம்பந்தப்பட்ட லஞ்ச வழக்குகளை எப்படி திறம்பட கையாளுவது மற்றும் அதற்கான வியூகங்கள், செயல்பாடுகள் வகுப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் ஊழல் தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் இந்த குழு ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு, எஸ்.பி.ஐ., முன்னாள் தலைவர் பிரதிப் சவுத்ரி, கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஐ.சி.ஐ.சி.ஐ.,யின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சாரை மற்றொரு கடன் மோசடி வழக்கில் சி.பி.ஐ., கைது செய்தது உட்பட, சமீப காலமாக மூத்த வங்கி அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஊழல் தடுப்பு சட்டத்தின் 17வது பிரிவின் கீழ், கூடுதல் பாதுகாப்பு கோரி வங்கிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இப்பிரிவின் கீழ், அரசு ஊழியர்கள் தங்கள் உத்தியோக கடமைகளை மேற்கொள்ளும்போது செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையையும், துவங்குவதற்கு முன் உயர் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் தேவை.
நடவடிக்கை
கடன் வழங்குதல் போன்ற வணிக ரீதியான முடிவுகளை எடுக்கும் மூத்த வங்கி அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை ஏஜன்சிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் தொடர்பாக எழும் சிக்கல்களை தீர்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய அரசுடன் முதற்கட்ட விவாதங்களுக்கு பின், வங்கித் துறையில் நிலவும் சிக்கல்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இக்குழு எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கி உயர் அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை ஏஜன்சிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் தொடர்பாக எழும் சிக்கல்களை தீர்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது