தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ டீசலுடன் 10% ஐசோப்யூட்டனால் கலக்க மத்திய அரசு பரிசீலனை

 டீசலுடன் 10% ஐசோப்யூட்டனால் கலக்க மத்திய அரசு பரிசீலனை

 டீசலுடன் 10% ஐசோப்யூட்டனால் கலக்க மத்திய அரசு பரிசீலனை


ADDED : ஜூன் 09, 2026 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 07:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: கச்சா எண்ணெய் சார்பை மேலும் குறைக்க, பெட்ரோலில் எத்தனால் கலப்பை தொடர்ந்து, டீசலில் 10 சதவீதம் அளவுக்கு 'ஐசோப்யூட்ட னாலை' கலக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில், 40 சதவீதம் டீசலுக்கு தேவைப்படுகிறது. இதன் பயன்பாட்டை குறைத்தால், பெருமளவில் அன்னிய செலாவணியை சேமிக்க முடியும் என மத்திய அரசு நினைத்தது. முதற்கட்டமாக, டீசலுடன் எத்தனாலை கலக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடைமுறைக்கு சாதகமாக தெரியாததால், டீசலுடன் ஐசோப்யூட்டனாலை கலக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம், வர்த்தக வாகன நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள், பிரஜ் என்ற பசுமை எரிவாயு தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, இது தொடர்பான 10 மாத ஆய்வை மேற்கொள்ள உள்ளன.

இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், எத்தனாலை போல் இல்லாமல், டீசலுடன், சீராக கலங்கும் தன்மையுடையது ஐசோப்யூட்டனால். டீசலுடன், ஐசோப்யூட்டனால் 10 சதவீதம் அளவுக்கு கலக்கப்பட்டால், வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் நச்சு உமிழ்வு மற்றும் மைலேஜ் 1 முதல் 4 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு உள்ளது. இந்த கலவையை பயன்படுத்த, டீசல் இன்ஜின் உதிரிபாகங்கள் நிச்சயம் மேம்படுத்தப்பட வேண்டும்.

எத்தனாலை போல இந்த ஐசோப்யூட்டனாலையும், கரும்பு, சோளம், விவசாய கழிவுகளில் இருந்து பிரித்து எடுக்க முடியும். ஆனால், அதை உற்பத்தி செய்யும் கட்டமைப்பும் இந்தியாவில் தற்போது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us