/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ட்ரோன் எதிர்ப்பு போரில் சென்னை தொழில்நுட்பம்
/
ட்ரோன் எதிர்ப்பு போரில் சென்னை தொழில்நுட்பம்
ADDED : செப் 22, 2024 12:56 AM

சென்னை: சென்னையைச் சேர்ந்த 'பிக் பேங் பூம் சொல்யூஷன்ஸ்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், ராணுவ தயாரிப்பை மேற்கொள்ள, 250 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
ராணுவத்திற்கு தேவையான, ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை உருவாக்க, 200 கோடி ரூபாய்க்கு ராணுவ அமைச்சகத்திடம் ஒப்பந்தமும் செய்துள்ளது இந்நிறுவனம்.
சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் கடற்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, செயற்கை நுண்ணறிவின் வாயிலாக தீயை கண்டறிந்து அணைத்தல், தீயை தடுக்கும் அமைப்புகள், ஆபத்தில்லாத கடற்படை தடுப்பு அமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களில், கடற்படையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்பட்டு உள்ளது.