/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
குண்டு மிளகாய் விலை குவின்டால் ரூ.5,000 உயர்வு
/
குண்டு மிளகாய் விலை குவின்டால் ரூ.5,000 உயர்வு
ADDED : பிப் 08, 2026 01:08 AM

ராமநாதபுரம்: வரத்து குறைவால், குண்டு மிளகாய் வற்றல், குவின்டாலுக்கு 5,000 ரூபாய் விலை உயர்ந்து உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில், நேற்று நடந்த மிளகாய் சந்தைக்கு, குண்டு மிளகாய் வற்றல் விற்பனைக்கு வந்தது. கடந்த வாரத்தில், 10 கிலோ மூட்டை, 3,000 ரூபாய் முதல், 3,300 ரூபாய் வரை விற்ற நிலையில், நேற்றைய சந்தையில் மூட்டை, 3,300 ரூபாய் முதல், 3,800 ரூபாய் வரை விற்பனையானது.
கடந்த வாரத்தில், குவின்டால், 33,000 ரூபாய்க்கு விற்பனையான முதல்தர, பெரிய வகை குண்டு மிளகாய் வற்றல், 5,000 ரூபாய் விலை உயர்ந்து, 38,000 ரூபாய்க்கு, நேற்று விற்பனையானது.
போதிய மகசூல் இல்லாததால், குறைந்த அளவிலேயே சந்தைக்கு குண்டு மிளகாய் விற்பனைக்கு வருவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

