/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கச்சா எண்ணெய் துறை சார்ந்த பங்குகள் விலை உயர்வு
/
கச்சா எண்ணெய் துறை சார்ந்த பங்குகள் விலை உயர்வு
ADDED : ஜூன் 25, 2025 12:37 AM

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், விமான போக்குவரத்து, பெயின்ட் மற்றும் பசை தயாரிப்பு துறை நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது.
மும்பை பங்கு சந்தையின் வர்த்தக முடிவில், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகள் 3.17 சதவீதமும், பாரத் பெட்ரோலியம் பங்குகள் 1.72 சதவீதமும்; இந்தியன் ஆயில் பங்குகள் 2.12 சதவீதமும் உயர்ந்திருந்தன. இதேபோன்று, ஸ்பைஸ்ஜெட் பங்கு 2.1 சதவீதமும்; இன்டர்குளோப் ஏவியேஷன் பங்கு 2.49 சதவீதமும் உயர்ந்திருந்தன.
நெரோலாக் பெயின்ட்ஸ் பங்குகள் 1.70 சதவீதமும்; ஏசியன் பெயின்ட்ஸ் 0.57 சதவீதமும்; இண்டிகோ பெயின்ட்ஸ் 0.62 சதவீதமும்; பெர்ஜர் பெயிண்ட்ஸ் 0.08 சதவீதமும் அதிகரித்திருந்தன