sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

 கிருஷ்ணகிரியில் உயர்திறன் மையம் 'டெல்ட்டா எலக்ட்ரானிக்ஸ்' திறப்பு

/

 கிருஷ்ணகிரியில் உயர்திறன் மையம் 'டெல்ட்டா எலக்ட்ரானிக்ஸ்' திறப்பு

 கிருஷ்ணகிரியில் உயர்திறன் மையம் 'டெல்ட்டா எலக்ட்ரானிக்ஸ்' திறப்பு

 கிருஷ்ணகிரியில் உயர்திறன் மையம் 'டெல்ட்டா எலக்ட்ரானிக்ஸ்' திறப்பு


ADDED : மார் 06, 2026 01:24 AM

Google News

ADDED : மார் 06, 2026 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: டெல்ட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தமிழக திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரியில் உயர்திறன் மையத்தை திறந்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவித்ததாவது:

எரிசக்தி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை வழங்கி வருகிறோம். தற்போது தமிழக திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள பொறியியல் கல்லுாரியில் உயர்திறன் மையத்தை திறந்து உள்ளோம். இம்மையம், ரோபோடிக்ஸ், பி.எல்.சி ஆட்டோமேஷன் எனும் 'புரொகிராமபிள் லாஜிக் கன்ட்ரோலர்ஸ்' ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

இம்மையத்தில் அதிநவீன ஆட்டோமேஷன் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்ட கல்விக்கும் தொழில்துறை யதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளியை இது குறைக்கும். மாணவர்களை தொழில்துறை வல்லுநர்களாக உருவாக்குவதே இதன் நோக்கம் ஆகும்.

இங்கு, மாதத்துக்கு 120 மணி நேரம் என்ற அடிப்படையில் குறுகிய கால பயிற்சிகளும், மூன்று மாதங்களுக்கு 272 மணி நேரம் என்ற அடிப்படையில் நீண்டகால பயிற்சிகளும் வழங்கப்படும். தமிழக அரசின் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின்கீழ் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அணியில் 20 முதல் 25 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

இவ்வாறு கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us