/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரிலையன்ஸ் டிஜிட்டலில் தீபாவளி தள்ளுபடி விற்பனை
/
ரிலையன்ஸ் டிஜிட்டலில் தீபாவளி தள்ளுபடி விற்பனை
ADDED : அக் 26, 2024 11:24 PM

சென்னை:தீபாவளியை முன்னிட்டு, முன்னணி வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி டிவி, ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏசி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் வாங்குவோருக்கு 15,000 ரூபாய் வரையும், நேரில் வாங்குவோருக்கு 22,500 ரூபாய் வரையும் உடனடி தள்ளுபடி சலுகையை ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவித்துள்ளது.
நவம்பர் 3ம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த சலுகையை ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்களிலும் reliancedigital.in என்ற இணையதள ஷாப்பிங்கிலும் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு பொருட்கள் திருவிழாவுடன் தீபாவளியை ரிலையன்ஸ் டிஜிட்டலுடன் இந்தியா கொண்டாடுகிறது என்ற தலைப்பில், அந்நிறுவனம் இதற்கான அழைப்பை விடுத்துள்ளது.
அத்துடன் 1,990 ரூபாய் மாதத் தவணையில் 43 அங்குல சாம்சங் நியோ கியூ.எல்.இ.டி., டிவியை, 41,990 ரூபாய் என்ற தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்றும், ஆப்பிள் ஐபோன், ஐபேட், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை பண்டிகை கால தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமையலறை சாதனங்கள் ஒன்று வாங்கினால் 5%, இரண்டு வாங்கினால் 10%, மூன்று மற்றும் அதற்கு மேல் வாங்கினால் 15% என தள்ளுபடி வழங்கப்படுகிறது.
லேப்டாப்கள் மீது 20,000 ரூபாய் வரை சலுகை களும்; ஒன்றரை டன் ஸ்மார்ட் ஏசி 28,990 ரூபாயில் இருந்து விலை துவங்குவதாகவும், ரிலையன்ஸ் டிஜிட்டல் தெரிவித்துள்ளது.