தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ விளைச்சல் குறித்த கணிப்பால் துவரம் பருப்பு ஏலம் ஒத்திவைப்பு

 விளைச்சல் குறித்த கணிப்பால் துவரம் பருப்பு ஏலம் ஒத்திவைப்பு

 விளைச்சல் குறித்த கணிப்பால் துவரம் பருப்பு ஏலம் ஒத்திவைப்பு


ADDED : ஜூன் 13, 2026 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 02:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'எல் நினோ' தாக்கத்தால் மழை பொழிவு குறைந்து, காரீப் பருவ உற்பத்தி பாதிக்கப்படலாம் என்ற கணிப்புகளால், துவரம் பருப்பு விற்பனைக்கான ஏலத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

அகில இந்திய பருப்பு ஆலை உரிமையாளர்கள் சங் கம் தெரிவித்துள்ளதாவது:

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த துவரம் பருப்பை விற்பனை செய்வதற்கான ஏலத்தை, வழக்கமான அட்டவணைப்படி தேசிய நுகர்வோர் கூட்டுறவு அமைப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், நடப்பாண்டில் இயல்பான மழை பொழிவு குறையும் என வானிலை மைய கணிப்புகள் வெளிவந்தன. மேலும், காரீப் பருவ பருப்பு ரகங்கள் உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இதையடுத்து, பருப்பு ஆலை வர்த்தகர்கள் காரீப் பருவத்தில் பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்தால், விலை அதிகரிக்கக்கூடும் எனக்கருதி, அடுத்த 2 மாதங்களுக்கு துவரம் பருப்பு விற்பனைக்கான ஏலத்தை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, துவரம் பருப்பு விற்பனை ஏலம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அத்துடன், அரசிடம் உள்ள பருப்பு கையிருப்பு, நுகர்வோருக்கு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், ஊக வணி கத்தால் ஏற்படும் விலை ஏற்றத்தை தடுக்கவும் உதவும். மழைப்பொழிவு, விதைப்பு நிலவரம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் வரை இரண்டு மாதங்கள் துவரம் பருப்பை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

பருப்பு கையிருப்பு (லட்சம் டன்னில்) மே 2026 43 நடப்பாண்டில் கொள்முதல் துவரம் பருப்பு 5 .34 கொண்டைக்கடலை 20.35



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us