/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையம் ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பம்
/
மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையம் ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பம்
மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையம் ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பம்
மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையம் ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பம்
ADDED : டிச 18, 2024 10:04 PM

புதுடில்லி:மின்னணு வர்த்தகத்துக்கான ஏற்றுமதி மையங்களை அமைக்க, மேலும் ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மின்னணு வர்த்தக ஏற்றுமதி, தற்போது கிட்டத்தட்ட 42,000 கோடி ரூபாயாக உள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள் இது, 8.40 லட்சம் கோடி ரூபாயை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மின்னணு வர்த்தக ஏற்றுமதி வாய்ப்புகளைப் பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சோதனை முறையில், மூன்று ஏற்றுமதி மையங்களை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
ஏற்கனவே இந்த மையங்களை செயல்படுத்த 'ஷிப்ராக்கெட், கார்கோ சர்வீஸ் சென்டர்' ஆகிய இரண்டு நிறுவனங்களை அரசு தேர்வு செய்திருந்த நிலையில், தற்போது மேலும் ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
இதுகுறித்து அந்த அதிகாரி தெரிவித்ததாவது:
'டி.எச்.எல்., லெக்ஷிப்' உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள், மின்னணு வர்த்தகத்துக்கான ஏற்றுமதி மையங்களை அமைக்க விண்ணப்பித்துள்ளன. இதில் மூன்று விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள், இரண்டு மையங்களை டில்லி விமான நிலையத்துக்கு அருகே அமைக்க உள்ளன. அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் இவை செயல்படத் துவங்கும்.
விரைவான பாதுகாப்பு, சுங்க சோதனைகள் மேற்கொள்வதற்கான வசதிகள், இந்த மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரக் கட்டுப்பாடு அமைப்புகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் திருப்பி அனுப்பப்படும்போது, அவற்றுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படாதவாறு எளிமையான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை முறையில் செயல்படுத்தப்படவுள்ள இந்த மையங்கள் குறித்து, நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்ட பின், நாடு முழுதும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிடும்.
இவ்வாறு தெரிவித்தார்.

