/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பொருளாதார கவுன்சில் தலைவர் மகேந்திர தேவ்
/
பொருளாதார கவுன்சில் தலைவர் மகேந்திர தேவ்
ADDED : ஜூன் 08, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவராக, மகேந்திர தேவ் பொறுப்பேற்றுள்ளார்.
நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களில் ஒருவரான தேவ், இந்திரா காந்தி பொருளாதார வளர்ச்சி ஆராய்ச்சி கல்வி நிறுவன துணைவேந்தராக பணியாற்றியவர்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவராக, நிடி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, இதுவரை கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
கவுன்சிலின் முதலாவது தலைவரான பிபேக் தேப்ராய் காலமான நிலையில், கடந்த நவம்பர் முதல், முழுநேர தலைவர் இல்லாமல் இருந்த கவுன்சிலுக்கு தேவ் புதிய தலைவராகியுள்ளார்.