/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எப் அண்டு ஓ., ஒப்பந்தங்கள் நிறைவடையும் வாரம், கவனம்
/
எப் அண்டு ஓ., ஒப்பந்தங்கள் நிறைவடையும் வாரம், கவனம்
எப் அண்டு ஓ., ஒப்பந்தங்கள் நிறைவடையும் வாரம், கவனம்
எப் அண்டு ஓ., ஒப்பந்தங்கள் நிறைவடையும் வாரம், கவனம்
ADDED : செப் 22, 2024 12:49 AM

கடந்த வாரம்
உள்நாட்டு விமான பயணங்களின் எண்ணிக்கை, கடந்த ஜூலை மாதத்தில் 7.30 சதவீதம் அதிகரித்து, 1.29 கோடியாக இருந்தது என, சிவில் விமானப் போக்கு வரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது
பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வரும்பட்சத்தில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பண கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதத்தை குறைப்பது என, அமெரிக்க பெடரல் வங்கி அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்
டிபாசிட் வளர்ச்சியைக் காட்டிலும் கடன் வளர்ச்சி அதிகரித்து வரும் சூழலில், கடந்த மாதம் 26ம் தேதி நிலவரப்படி, பங்குச் சந்தை வாயிலாக வங்கிகள் திரட்டிய கடனின் மதிப்பு 9.32 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது என, ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன
பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு பிரிவில், கடந்த மாதம் புதிதாக 54 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன
பங்குச் சந்தை முதலீடுகள் விலையுயர்ந்ததாக மாறி வருவதால், அன்னிய முதலீட்டாளர்கள் புதிய பங்கு வெளியீட்டின் பக்கம் திரும்பியுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை ஐ.பி.ஓ., மற்றும் தகுதிவாய்ந்த நிறுவன முதலீடு கள் வாயிலாக 53,568 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்
அன்னிய முதலீட்டாளர்கள் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில், 14,790 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி சேவைகள் துறை பங்குகளை விற்று உள்ளனர்
நாடு முழுதும் தேவை குறைந்துள்ளதன் வெளிப்பாடாக, நடப்பு நிதியாண்டுக் கான வருவாய் வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகளை, பெருமளவிலான இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைத்துள்ளன
புதிய ஆர்டர்களின் எண்ணிக்கை குறைவால், நாட்டின் தயாரிப்பு துறை வளர்ச்சி இம்மாதம் சற்றே குறைந்துள்ளது. எனினும், சேவைகள் துறை வளர்ச்சி அதிகரித்துள்ளது.
வரும் வாரம்
அன்னிய செலாவணி கையிருப்பு, உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்ட அளவு, ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம் போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
வாடிக்கையாளர்வசம் நீடித்து உழைக்கும் ரகத்திலான பொருட்கள் உற்பத்தி, எஸ் அண்டு பி., கேஷ்-ஷில்லர் வீடுகள் விலை நிலவரம், சிபி நுகர்வோர் நம்பிக்கை குறியீடு, ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், வேலை இல்லாத நபர்களின் எண்ணிக்கை, தனி நபர் வருமானம், தனி நபர் செலவுகள், தனிநபர் நுகர்வு செலவுகள் விலைக்குறியீடு போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 31 புள்ளி ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 126 புள்ளிகள் ஏற்றத்துடனும்; புதனன்று 71 புள்ளிகள்; வியாழனன்று 41 புள்ளிகள்; வெள்ளியன்று வர்த்தக நாளின் இறுதியில் 11 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், திங்கள் முதல் வெள்ளி வரையிலான வாராந்திர அடிப்படையிலான ஒட்டுமொத்த அளவீட்டில் 282 புள்ளிகள் ஏற்றத்துடன், நிப்டி நிறைவடைந்திருந்தது
ஆகஸ்ட் மாத எப் அண்டு ஓ., ஒப்பந்தங்கள் வரும் வாரத்தில் நிறைவடைய உள்ளன. இதன் தாக்கமும், உலக சந்தைகள் காணும் ஏற்ற இறக்கங்கள், செய்திகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவற்றின் தாக்கமுமே, சந்தையின் குறுகிய கால போக்கினை நிர்ணயிப்பதில் பெரும்பங்களிப்பை கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
டெக்னிக்கல் அனாலிசிஸ் அளவீடுகளின் படி பார்த்தால், சென்ற வார இறுதியில், நிப்டி ஏற்றமடைய வாய்ப்புள்ள சூழலில் இருப்பதைப் போன்ற நிலைமையே உருவாகியுள்ளது. ஆகஸ்ட் மாத எப் அண்டு ஓ., ஒப்பந்தங்கள் நிறைவடைதல், உலக சந்தைகளின் போக்கு, செய்திகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவையே, நிப்டியின் அடுத்த வார நகர்வுதனை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.
இது போன்ற சூழ்நிலைகளில், டெக்னிக்கல் அனாலிசிஸ் கொண்டு கணிக்கப்படும் கணிப்புகள் அடிக்கடி செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை நினைவில் கொண்டு, வர்த்தகர்கள் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளுக்கான திட்டங்களை தீட்டிக்கொள்ள வேண்டும்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 24,608, 24,393 மற்றும் 24,262 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 24,953, 25,082 மற்றும் 25,214 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24,738 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து வர்த்தகமாகிக்கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.