தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ மறுமதிப்பீட்டுக்கு தயாராகும் பின்டெக்: நிறுவன பங்குகள் யுபிஐ, கட்டண விதிப்பால் காத்திருக்கும் மாற்றங்கள்

 மறுமதிப்பீட்டுக்கு தயாராகும் பின்டெக்: நிறுவன பங்குகள் யுபிஐ, கட்டண விதிப்பால் காத்திருக்கும் மாற்றங்கள்

 மறுமதிப்பீட்டுக்கு தயாராகும் பின்டெக்: நிறுவன பங்குகள் யுபிஐ, கட்டண விதிப்பால் காத்திருக்கும் மாற்றங்கள்


UPDATED : செப் 19, 2026 08:38 AM

ADDED : செப் 19, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 08:38 AM ADDED : செப் 19, 2026 04:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ திக மதிப்புள்ள யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு 0.40 சதவீதம் கட்டணம் விதிக்கும் அரசின் புதிய அறிவிப்பால், இந்த வாரம் நிதிதொழில்நுட்ப துறையைச் சேர்ந்த 'பின்டெக் பங்குகள்' 13 சதவீதம் வரை சரிந்தன. இருப்பினும், இக்கட்டணம் இந்நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கும் என்பதால், பங்கு சந்தை நிபுணர்கள் மற்றும் தரகு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்த பிறகு 'ஒன் 97 கம்யூனிகேஷன், பைன் லேப்ஸ், ஒன் மொபிகுவிக்' உள்ளிட்ட பங்குகள்,நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

Image 1620829


பின்டெக் பங்குகளை இப்போது வாங்கலாமா, சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து 'எக்ட்ரா' பங்குச்சந்தை பயிற்சி நிறுவனத்தின் நிறுவனரான இரா.அருள்ராஜன் கூறியதாவது:

மொத்த முதலீடு வேண்டாம் பின்டெக் பங்குகள் சரிந்துள்ளதால் மட்டுமே அவற்றை உடனடியாக வாங்க கூடாது. எம்.டி.ஆர்., கட்டணம் வசூலிக்கும் புதிய அரசின் கொள்கை மாற்றம், வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பேமென்ட் நிறுவனங்களுக்கு புதிய வருவாய் மாதிரி உருவாகும் என்பதால், பின்டெக் பங்குகள் மறுமதிப்பீட்டிற்கு தயாராகி வருகின்றன. இருப்பினும், இந்நடவடிக்கையால் நிஜத்தில் வருவாயும் லாபமும் எந்த அளவிற்கு பெருகுகிறது என்பதை பொறுத்தே, சந்தை இதற்கான மதிப்பை உயர்த்தும். எனவே, ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல், பகுதி பகுதியாக எஸ்.ஐ.பி., முறையில் வாங்குவதே சிறந்த அணுகுமுறையாகும்.

ஒன் 97 கம்யூனிகேஷன் பங்கு விலை: ரூ.1,849.90



 முதல் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சாதகமாக இருப்பதால், சந்தையில் இந்த பங்கின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது

 ரூ.1,690 என்ற உடனடி ஆதரவை தக்கவைத்தால், ஏற்றம் தொடர வாய்ப்பு; முக்கிய ஆதரவு ரூ.1,591- ரூ.1,462.

 முக்கிய இண்டிகேட்டர்கள் வலுவான ஏற்றத்தை காட்டுகின்றன.

கவனம்: இந்த பங்கின் விலை 52 வார அதிகபட்ச விலையில் உள்ளது. புதிய முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் அதிகம். விலை ஏற்றத்தை பார்த்து அவசரமாக வாங்காமல், நல்ல ஆதரவு நிலை வரும் வரை காத்திருப்பது நல்லது.

பைன் லேப்ஸ் பங்கு விலை: ரூ.192.04



 ஜூலை 2026ல் ரூ.138 ஆக இருந்த பங்கு, தற்போது ரூ.194.50 வரை உயர்ந்து கிட்டத்தட்ட 40 சதவீத ஏற்றம் கண்டுள்ளது.

 முக்கிய வாராந்திர ஆதரவு நிலை ரூ.173- ரூ.165.

 ஆர்.எஸ்.ஐ., ஏற்றத்தில் இருப்பது பங்குக்கு சாதகமான சூழல் இருப்பதை காட்டுகிறது.

கவனம்: இதை வேகமாக ஏறும் பங்காக மட்டும் பார்க்காமல், வளர்ச்சி மற்றும் இறக்கத்தின் ஏற்றமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது ரூ.212 தடைநிலைக்கு அருகில் உள்ளது. அதை தாண்டினால் ஏற்றம் தொடரலாம்.

ஒன் மொபிகுவிக் பங்கு விலை: ரூ. 212.48


 இந்தாண்டின் 2026 ஆரம்பத்திலிருந்து இதன் விலை ரூ.151-ரூ.244 எல்லைகளுக்குள் வர்த்தகமாகி வருகிறது

 ஏ.டி.எக்ஸ்., மற்றும் ஆர்.எஸ்.ஐ., குறியீடுகள் பெரிய மாற்றம் இல்லாமல் பக்கவாட்டு நகர்வை காட்டுகின்றன

 வங்கி அல்லாத நிதிநிறுவனமாக ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்குவதையும், எதிர்கால வியாபார விரிவாக்கத்தையும் சந்தை எதிர்பாக்கிறது.

கவனம்: குறிப்பிட்ட எல்லைக்குள்ளாகவே பங்கு விலை வர்த்தகமாவதால், இறங்கி வரும்போது கீழ் எல்லையில் வாங்குவது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us