/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
செமிகண்டக்டர் இயக்கத்தின் அடுத்த கட்டத்தில் கவனம்: பிரதமர்
/
செமிகண்டக்டர் இயக்கத்தின் அடுத்த கட்டத்தில் கவனம்: பிரதமர்
செமிகண்டக்டர் இயக்கத்தின் அடுத்த கட்டத்தில் கவனம்: பிரதமர்
செமிகண்டக்டர் இயக்கத்தின் அடுத்த கட்டத்தில் கவனம்: பிரதமர்
ADDED : செப் 02, 2025 11:48 PM

புதுடில்லி;இந்தியாவில் சிப் தயாரிப்பை ஊக்குவிக்க, செமிகண்டக்டர் இயக்கத்தின் அடுத்த கட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டில்லியில் 'செமிகான் இந்தியா - 2025' மாநாட்டை துவக்கி வைத்து, பிரதமர் மோடி தெரிவித்ததாவது:
இந்தியா மீது உலகம் நம்பிக்கையுடன் உள்ளது. இந்தியாவுடன் இணைந்து சிப் தயாரிப்பில் ஈடுபட உலக நாடுகள் தயாராக உள்ளன. அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்திய சிப் தயாரிப்பு இலக்குக்கான அடுத்த கட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
நம் முயற்சி, வெறும் சிப் தயாரிப்புடன் நின்றுவிடாமல், அதற்கான சூழலை கட்டமைப்பதன் வாயிலாக உலகளவில் போட்டி போடுவதுடன், தன்னிறைவு அடைய செய்யும். இந்தியா பின்தங்கிய நிலையில் இருந்து, தற்போது முழுமையான சிப் தயாரிப்பு நாடாக மாறி உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப், உலகளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை. நம் பயணம் தாமதமாக துவங்கி இருக்கலாம். ஆனால், எவராலும் தற்போது நம்மை நிறுத்த முடியாது.
முதல் காலாண்டு வளர்ச்சி, அனைவரது எதிர்பார்ப்பையும் விஞ்சியுள்ளது. மறுபுறம், பொருளாதார சுயநலவாதிகள் காரணமாக சவால்கள் அதிகரித்து, அழுத்தத்தை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
இதையெல்லாம் தாண்டி, தயாரிப்பு, விவசாய துறையில் வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.