/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூ.26,000 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
/
ரூ.26,000 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
ரூ.26,000 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
ரூ.26,000 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
ADDED : டிச 02, 2024 12:59 AM

புதுடில்லி:அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அன்னிய பங்கு முதலீட்டாளர்கள், நவம்பர் மாதத்திலும் தங்கள் பங்கு விற்பனை தொடர்ந்தனர். இதன்படி, கடந்த மாதம் 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். முந்தைய மாதமான அக்டோபரில் விற்பனை செய்த 94,000 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், நவம்பரில் விற்பனை வேகம் குறைந்துள்ளது.
நவம்பரில் சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக குறைந்த மதிப்பீட்டினால் விற்பனையின் வேகம் ஓரளவு குறைந்திருந்ததாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 29ம் தேதி வரையிலான காலகட்டத்தில், நடப்பாண்டுக்கான மொத்த அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை 1.19 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மேலும், முதன்மை சந்தை வாயிலாக இந்த காலகட்டத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் 1.04 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.