தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சிறப்பாக செயல்படும் பண்டுகள்: முதலிடத்தில் 'பிளெக்ஸி கேப்' பண்டுகள்

 ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சிறப்பாக செயல்படும் பண்டுகள்: முதலிடத்தில் 'பிளெக்ஸி கேப்' பண்டுகள்

 ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சிறப்பாக செயல்படும் பண்டுகள்: முதலிடத்தில் 'பிளெக்ஸி கேப்' பண்டுகள்


ADDED : ஜூன் 30, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய பங்கு சந்தையில் நிலவி வரும் தொடர் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், சிறு முதலீட்டாளர்களின் மியூச்சுவல் பண்டு முதலீட்டு வேகம், புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஓராண்டில், அதாவது, மே 2026 வரையிலான 12 மாதங்களில், முதலீட்டாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று 'பிளெக்ஸி கேப் பண்டுகள்' முதலிடத்தை பிடித்துள்ளன. இந்த காலகட்டத்தில், இந்த வகை பண்டு திட்டத்தில் செய்யப்பட்ட மொத்த முதலீடு 95,154 கோடி ரூபாய். கடந்த மே மாதத்தில் மட்டும் 5,176 கோடி ரூபாய் இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கும் வேளையில், ஒரே மாதிரியான பங்குகளில் முடங்காமல் பல்வேறு சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களில் மாறி மாறி முதலீடு செய்யும் உத்திக்கு முதலீட்டாளர்கள் முன்னுரிமை அளிப்பதையே இது காட்டுகிறது.

யார் கையில் எவ்வளவு சொத்துமுதலீட்டாளர் பிரிவு ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்டு சொத்து மதிப்பில் பங்கு (%) பெரும் செல்வந்தர்கள்(ஹெச்.என்.ஐ.,) 33.71 சிறு முதலீட்டாளர்கள 26.67 நிறுவனங்கள் / இதர பிரிவினர் 39.62

மியூச்சுவல் திட்டங்களின் நிகர முதலீடு (மே 2026) மியூச்சுவல் பண்டு திட்டப்பிரிவு நிகர முதலீடு வரத்து / வெளியேற்றம் (ரூ. கோடியில்) பிளெக்ஸி கேப் 5,175.54 மல்டி கேப் 2,291.01 லார்ஜ்கேப் 1,592.93 லார்ஜ் அண்டு மிட் கேப் 2,541.42 மிட்கேப் 4,385.06 ஸ்மால்கேப் 4,945.57 டிவிடெண்ட் யீல்டு -97.46 வேல்யூ / கான்ட்ரா 509.57 போகஸ்டு 830.25 செக்டோரல் / தீமேடிக் 647.87 இ.எல்.எஸ்.எஸ்., -650.78 மொத்தம் 22,907.77

எஸ்.ஐ.பி., சாதனை கடந்த ஆண்டு மே மாதம் 26,688 கோடி ரூபாயாக இருந்த மாதாந்திர எஸ்.ஐ.பி., பங்களிப்பு, நடப்பு 2026 மே மாதத்தில் 30,954 கோடியாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த எஸ்.ஐ.பி., சொத்து மதிப்பு 17 சதவீதம் உயர்ந்து, 17.12 லட்சம் கோடி ரூபாயை தொட்டுள்ளது. இந்தியாவின் மொத்த எஸ்.ஐ.பி., கணக்குகளின் எண்ணிக்கை 10.47 கோடியாக உயர்வு.



கிராமபுறங்களின் வளர்ச்சி இந்தியாவின் டாப் 30 நகரங்களுக்கு வெளியேயுள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களின் முதலீட்டு பங்களிப்பு வேகமான வளர்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 2020ல் மொத்த மியூச்சுவல் பண்டு சொத்து மதிப்பில் 16 சதவீதமாக இருந்த இந்த நகரங்களின் பங்கு, தற்போது 2026 மே மாதத்தில் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us