தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க 6 குழுக்களை அமைத்தது அரசு

 உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க 6 குழுக்களை அமைத்தது அரசு

 உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க 6 குழுக்களை அமைத்தது அரசு


ADDED : ஜூன் 05, 2026 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும், இறக்குமதி சார்பை குறைப்பதற்கும் தேவையான முக்கிய பொருட்களை அடையாளம் காண்பதற்காக, ஆறு துறைசார் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படாத அல்லது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி செய்யப்படாத, கிட்டத்தட்ட, 100 முக்கிய பொருட்களை கண்டறிந்து, அவற்றின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ஆறு குழுக்களை அரசு உருவாக்கி உள்ளது.

இக்குழுக்களில், வர்த்தகம், தொழில் மற்றும் உள் வர்த்தக மேம்பாடு (டி.பி.ஐ.ஐ.டி.,), நிதி, நிடி ஆயோக், மருந்துகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஜவுளி, கனரக தொழில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், சாலை போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

இவற்றின் அறிக்கை, மூன்று வாரங்களுக்குள் அமைச்சரவை செயலகத்திடம் சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

ஆறு குழுக்கள் குழு 1: மருந்துகள், பயோடெக்னாலஜி மற்றும் மருத்துவ உபகரணங்கள் குழு 2: ரசாயனங்கள், பெட்ரோகெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் காலணிகள் குழு 3: மூலதனப் பொருட்கள், ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள், மூலதன பொருட்கள் குழு 4: எரிசக்தி துறை குழு 5: கட்டுமான உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு குழு 6: பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறை (சிவில் பயன்பாடு), மின்னணுவியல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us