/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு அரசு தடை
/
லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு அரசு தடை
ADDED : அக் 14, 2024 01:21 AM

புதுடில்லி:பாக்கெட் லைட்டர்களுக்கான உதிரிபாகங்கள் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மேலும், இத்தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு அறிவித்து உள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், சீன இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில், தற்போது பாக்கெட் லைட்டர்கள், எரிவாயு எரிபொருள், ஒருமுறை எரிபொருள் நிரப்பக்கூடிய அல்லது நிரப்பமுடியாத லைட்டர்கள் ஆகியவற்றின் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாகவும், இது உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே, 20 ரூபாய்க்கு குறைவான விலை கொண்ட லைட்டர்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
தரமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் லைட்டர்களுக்கான கட்டாய தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அரசு கடந்த ஆண்டுவெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.