/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தங்க சுத்திகரிப்பு ஆலை அமைக்க இந்தியாவிற்கு சிறந்த வாய்ப்புகள்
/
தங்க சுத்திகரிப்பு ஆலை அமைக்க இந்தியாவிற்கு சிறந்த வாய்ப்புகள்
தங்க சுத்திகரிப்பு ஆலை அமைக்க இந்தியாவிற்கு சிறந்த வாய்ப்புகள்
தங்க சுத்திகரிப்பு ஆலை அமைக்க இந்தியாவிற்கு சிறந்த வாய்ப்புகள்
ADDED : பிப் 15, 2024 11:39 PM

புதுடில்லி:இந்தியாவில் தங்க சுத்திகரிப்பு மையங்களை அமைப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் உள்ளதாக, ஐ.எப்.எஸ்.சி.ஏ., என்னும் சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தின் தலைவர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
உலகிலேயே தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா விளங்குவதால், இங்கு தங்க சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது வசதியாக இருக்கும். தங்க வர்த்தகத்தின் மையமாக இருப்பதை தாண்டி, அதன் வினியோக சங்கிலியில் முக்கிய பங்காற்றக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளது.
பரிசீலனை
தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா விளங்குவதால், இங்கு சுத்திகரிப்பை மேற்கொள்ளவும் சிறந்த வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா ஆண்டுக்கு 250 டன் தங்கக் கட்டிகளை சுத்திகரிப்பு செய்வதற்காக இறக்குமதி செய்கிறது. குஜராத்தின் கிப்ட் சிட்டியில் தங்க சுத்திகரிப்பை மேற்கொள்ளலாமா என்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். இதை செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன,
மேலும், ஏதேனும் மேம்பாடுகள் தேவைப்பட்டால், அது குறித்தும் பரிசீலனை செய்யலாம். இதற்கான நடவடிக்கைகளுக்கு, வரிக் கொள்கைகள் அல்லது சுங்கக் கட்டணங்களில் சில மாற்றங்கள் தேவைப்பட்டால், நிச்சயம் அது குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்படும்.
முக்கிய பொருள்
தங்கம், நிலத்தை போல முக்கியமான பொருளாக விளங்குவதால், அதை பணமாக்குவதற்கான வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும். பெரும் பகுதி தங்கம் பொதுமக்களின் அலமாரியிலும், 800 டன் தங்கம் ரிசர்வ் வங்கியின் லாக்கரிலும் அடைபட்டு கிடக்கிறது.
இதை, நம் பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐ.எப்.எஸ்.சி.ஏ., இந்தியாவில் உள்ள சர்வதேச நிதிச் சேவை மையங்களின் நிதி தயாரிப்புகள், நிதிச் சேவைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக்கான ஒருங்கிணைந்த அதிகார மையம் என்பது குறிப்பிடத்தக்கது.