/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஐ.பி.ஓ., வரும் கிரீவ்ஸ் எலக்ட்ரிக்
/
ஐ.பி.ஓ., வரும் கிரீவ்ஸ் எலக்ட்ரிக்
ADDED : டிச 25, 2024 01:36 AM

புதுடில்லி:மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி, புதிய பங்கு வெளியீடு வாயிலாக 1,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
கிரீவ்ஸ் காட்டன் மற்றும் அப்துல் லத்தீப் ஜமீல் கிரீன் மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள், கிரீவ்ஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளன.
இதில் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம், 62.5 சதவீத பங்குகளையும், மீதம் உள்ள பங்குகளை அப்துல் லத்தீப் ஜமீல் கிரீன் மொபிலிட்டி நிறுவனமும் வைத்துள்ளன. மொத்தம், 18.93 கோடி பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2008 முதல் இயங்கி வரும் கிரீவ்ஸ் எலக்ட்ரிக் நிறுவனம், இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவன ஆலைகள், தமிழகத்தின் ராணிப்பேட்டை, உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா மற்றும் தெலுங்கானாவின் துாப்ரான் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.