உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 23, 2026 05:41 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: மே மாதத்தில் நாட்டின் முக்கிய கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி 0.50 சதவீதமாக குறைந்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி ஏழு மாதங்களில் இல்லாத அளவு சரிந்துள்ளது.
இத்துறைகளின் வளர்ச்சி 2026 ஏப்ரலில் 1.80 சதவீதமாகவும், 2025 மே மாதத்தில் 1.20 சதவீதமாகவும் இருந்தது. நேற்று வெளியிடப்பட்ட அரசு தரவுகளின்படி, நிலக்கரி, கச்சா எண்ணெய், உள்ளிட்ட துறைகள் எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
2026--27 நிதியாண்டின் ஏப்., -மே காலக்கட்டத்தில், முக்கிய துறைகளின் விரிவாக்கம் எவ்வித மாற்றமுமின்றி 1.10 சதவீ தமாகவே நீடித்தது. அக்டோபர் 2025ல், இத்துறைகளின் உற்பத்தி 0.10 சதவீத எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்தது.
