/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூ.5 லட்சம் கோடி எட்டிய எச்.சி.எல்.,
/
ரூ.5 லட்சம் கோடி எட்டிய எச்.சி.எல்.,
ADDED : அக் 11, 2024 10:28 PM

புதுடில்லி:'எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் சந்தை மதிப்பு, முதல் முறையாக நேற்று வர்த்தக நேரத்தின் இடையே, 5 லட்சம் கோடி ரூபாயை கடந்தது.
நேற்று வர்த்தக நேரத்தின் இடையே, மும்பை பங்குச் சந்தையில், நிறுவனத்தின் பங்கு விலை 2 சதவீதம் உயர்ந்து, 1,852 ரூபாயாக இருந்தது. அப்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு, முதல் முறையாக 5 லட்சம் கோடி ருபாயை கடந்தது. எனினும், வர்த்தக நேர முடிவில் இது 4.99 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் தற்போது எச்.சி.எல்., நிறுவனத்துடன் சேர்த்து, மொத்தம் 10 நிறுவனங்கள், 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலான சந்தை மதிப்பை கொண்டுள்ளன.
எச்.சி.எல்., நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த ஜூன் மாதத்தில் 1,235 ரூபாயாக சரிந்திருந்தது. இதன் பின் தற்போது வரை அதன் பங்கு விலை, 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, எச்.சி.எல்., நிறுவனத்தின் இயக்குனர் குழு வரும் திங்களன்று கூட இருக்கிறது.