/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
உலக அளவில் சிறந்த பங்கு சந்தைகள்: இரண்டாம் இடம் பிடித்தது இந்தியா
/
உலக அளவில் சிறந்த பங்கு சந்தைகள்: இரண்டாம் இடம் பிடித்தது இந்தியா
உலக அளவில் சிறந்த பங்கு சந்தைகள்: இரண்டாம் இடம் பிடித்தது இந்தியா
உலக அளவில் சிறந்த பங்கு சந்தைகள்: இரண்டாம் இடம் பிடித்தது இந்தியா
ADDED : அக் 03, 2024 02:53 AM

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், உலகளவில் சிறந்த பங்குச் சந்தைகள் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
உலகளவில் சிறந்த 'டாப் 5' சந்தைகள் பட்டியலில், ஹாங்காங் முதலிடத்தில் உள்ளது. இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சீன பங்குச் சந்தைகள் அடுத்தடுத்த இடம் பிடித்துள்ளன. கடந்த மாதத்தில் ஹாங்காங் பங்குச் சந்தை 17.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டது.
குறிப்பாக, கடைசி ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும், அச்சந்தை 16 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. ஆனால், மே மாதத்துக்கு பின், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், தொடர்ந்து நிலையான வளர்ச்சி கண்டு, இந்த இடத்தை பிடித்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்ததால், பங்குச் சந்தையில், மியூச்சுவல் பண்டு சார்ந்த திட்டங்களில் 1.80 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல், அன்னிய முதலீட்டாளர்களும் கிட்டத்தட்ட 92,400 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி குவித்து உள்ளனர்.
இதற்கிடையே, இந்த ஆண்டில் இதுவரை பங்கு வணிகம் வாயிலாக, முதலீட்டாளர்கள் 110.47 லட்சம் கோடி ரூபாய் லாபம் பெற்றிருப்பதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
தொடர்ந்து உச்சம் கண்டு வந்த பங்குச் சந்தைகளால், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு 475 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.