உள்ளடக்கத்திற்கு செல்ல

மீன்பிடி மானிய வரைவு திட்டத்துக்கு இந்தியா ஆதரவு
மீன்பிடி மானிய வரைவு திட்டத்துக்கு இந்தியா ஆதரவு
ADDED : மார் 30, 2026 01:29 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: டபிள்யு.டி.ஓ., எனப்படும் உலக வர்த்தக அமைப்பில் கொண்டு வரப்பட்ட மீன்பிடி மானியங்கள் தொடர்பான வரைவு தீர்மானத்துக்கு இந்தியா தன் ஆதரவை தெரிவித்துள்ளது.
கடல் வளங்கள் அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்படுவதை தடுக்கும் அதே வேளையில், சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்கு தனித்துவம் வாய்ந்த சலுகைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் இத்திட்டம், சட்டவிரோத மீன்பிடித்தலை கட்டுப்படுத்த வலியுறுத்துகிறது.
பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இது தொடர்பான விவாதத்தில் தற்போது எட்டப்பட்டுள்ள முன்னேற்றம், மீனவர் நலன்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்தியா அதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.
